MARC காட்சி

Back
புள்ளலூர் நினைவிடம்
245 : _ _ |a புள்ளலூர் நினைவிடம் -
300 : _ _ |a நினைவிடம்
500 : _ _ |a

அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம்-திருப்பதி சாலையில் திருமால்பூர் ரயில் நிறுத்தத்திற்கு முன்பு இடது புற குறுகிய கிராம சாலையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்  புள்ளலூர் அமைந்துள்ளது. பொள்ளிலூர் போரில் வீர மரணம் அடைந்த ஆங்கில தளபதிகளான ஜார்ஜ் பிரவுன் மற்றும் ஜேம்ஸ் ஹில்சொப்பின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவு சின்னங்கள் இங்கு அமைந்துள்ளன. இந்த நினைவு சின்னங்களை அவ்வூர் மக்கள் கோரி(Ghori) என்ற அழைப்பார்கள். நெல்வயல்கள் பரந்துவிரிந்த நிலத்தின் நடுவில் பாழடைந்த உயரமான 2 நினைவு சின்னங்கள் தென்படுகின்றன. இரண்டு சின்னங்களும் உயரமான தளத்தில் கட்டப்பட்டு இருபுறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நினைவு சின்னங்களின் கிழக்குப் பார்த்த சுவரில் போரில் உயிர் துறந்த ஆங்கில தளபதிகளான ஜார்ஜ் பிரவுன் மற்றும் ஜேம்ஸ் ஹில்சொப் ஆகியவர்களின் நினைவாக கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் காலத்தின் தேய்மானத்தால் அழியும் நிலையில் காணப்பட்டன. பொள்ளிலூர் போர் இரண்டாம் ஆங்கில மைசூர் போரை சேர்ந்தது. 1780ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி ஆங்கிலத் தளபதி ஜார்ஜ் பெய்லி தலைமையில் கிழக்கிந்திய நிறுவனமும் திப்பு சுல்தான் தலைமையில் உள்ள மைசூர் ராஜ்ஜியமும் போரிட்டனர். இந்தப் போரில் திப்பு சுல்தானின் கை ஓங்கியிருந்தது. மைசூர் ஏவுகணைகளை திறம்பட பயன்படுத்தி ஆங்கில படையினரை திணற வைத்தார். ஏவுகணை தாக்குதலால் ஆங்கில படை பெருத்த சேதம் அடைந்து பல போர் வீரர்கள் கொல்லப்பட்டு மீதமுள்ளோர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இந்திய மண்ணில் பிளாசி மற்றும் பக்சார் போர்களில் வெற்றி பெற்று நம் நாட்டில் பாதம் பதித்த ஆங்கிலேயர்கள் இந்தப் போரில் படுதோல்வி அடைந்தனர். இப்போரில் வீர மரணம் அடைந்த ஆங்கிலேயத் தளபதிகள் ஜார்ஜ் பிரவுன் மற்றும் ஜேம்ஸ் ஹில்சொப் ஆகியோரின் நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சின்னமாகும்.

520 : _ _ |a

         புள்ளலூர் போர் (The Battle of Pollilur (Pullalur) புள்ளலூரில் 1780 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 தேதியன்று நடைபெற்றது. இஃது இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இந்தப் புள்ளலூர்ப் போரில் கர்னல் பெய்லியின் படைக்கு திப்பு சுல்தானின்  படையால் பெருத்த சேதம் ஏற்பட்டது. இப்போரில் ஏராளமான படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இப்போரில் இறந்த இரண்டு ஆங்கிலேயப் படைத் தளபதிகளுக்கு எடுக்கப்பட்ட நினைவிடம் இதுவாகும்.

653 : _ _ |a பொள்ளிலூர், ஜார்ஜ் பிரவுன், ஜேம்ஸ் ஹில்சொப், ஜார்ஜ் பெய்லி, கோரி, இரண்டாம் ஆங்கில-மைசூர் போர், மைசூர் போர், திப்பு சுல்தான், ஆங்கிலேயத் தளபதி, ஆங்கிலேயர், புள்ளலூர், திருமால்பூர், காஞ்சிபுரம், போர், கிழக்கிந்திக் கம்பெனி, பிரிட்டிஷார்
710 : _ _ |a திரு. குமரன் சண்முகம்
752 : _ _ |a புள்ளலூர் |c புள்ளலூர் |d காஞ்சிபுரம் |f திருமால்பூர்
906 : _ _ |a கி.பி.1780-81
914 : _ _ |a 12.9595442
915 : _ _ |a 79.674409
934 : _ _ |a திருமால்புரம் சிவன் கோயில், கோனார் கோயில்
995 : _ _ |a TVA_MON_00048
barcode : TVA_MON_00048
book category : நினைவிடங்கள்
cover :
Primary File :

TVA_MON_00048_புள்ளலூர்-நினைவிடம்-0001.jpg

TVA_MON_00048_புள்ளலூர்-நினைவிடம்-0002.jpg

TVA_MON_00048_புள்ளலூர்-நினைவிடம்-0003.jpg

TVA_MON_00048_புள்ளலூர்-நினைவிடம்-0004.jpg

TVA_MON_00048_புள்ளலூர்-நினைவிடம்-0005.jpg

TVA_MON_00048_புள்ளலூர்-நினைவிடம்-0006.jpg